கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உதநகர்(ஊரியான்)
நெடுங்காலமாக நன்னீர் அதாவது குடி நீர் பெறுவதில் பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறது,
அவசிய தேவைகளுக்கான குடிப்பதற்கான,உணவு சமைப்பதற்கான நீரை பெறுவதற்காக பிராதான வீதியைக்கடந்து சில மைல்கள்தாண்டியும் செல்லவேண்டியதாயிருக்கிறது இந்த நிலையில் பலவருடமாகவே நீரைப்பெற்றுக்கொள்வதற்காக பெண்கள் குடத்துடன் வீதியைக்கடந்து செல்வதை கண்டிருக்கிறோம் கவலை கொண்டிருக்கிறோம் இவற்றிற்கு எப்போது தீர்வு வரும் யார் முடிவு காண்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்....
உறவுகளின் பிரச்சனையை கண்கூடாக கண்டுவந்த நிலைய நிர்வாகத்தினர் இவற்றிற்கு நிரந்தர தீர்வுகண்டு உதய நகர் மக்கள் எதிர்கொண்டுவரும் குடி நீர் பிரச்சனையை முடிவுகட்டும் நல்ல காரியத்தை கையிலெடுத்திருக்கிறார்கள் அவர்களை உறவுகள் கிராமத்தவர்கள் சார்பில் பாராட்டி வாழ்த்தி வரவேற்கிறோம்......
உதயநகர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்...
2015ம் ஆண்டு நிர்வாகத்தின் முயற்சியினால் தென்மராட்சி பிரதேச சபையினதும் வெளிநாட்டு உறவுகளின் நிதி அன்பளிப்புகளுடனும் மக்களினது பங்களிப்புக்களுடன் நீர் வளங்கள் வடிகாலமைப்பு திணைக்களத்தின் உதவியுடன் இன்று ( 06.12.2015 ) ஆரம்பிக்கப்பட்ட உதயநகர் மக்களுக்கான குழாய் மூலம் குடி நீர் வழங்கும் திட்டம் கைதடி வடக்கு வீதியில் இருந்து JCB இயந்திரத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட போது. இது 2.5 KM தூரமுடையதும் ரூபா 7,50,000/= பெறுமதியான வேலைத்திட்டம் ஆகும்.








No comments:
Post a Comment